தயாராக இருங்கள்... தன் குடிமக்களுக்காக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அவசர கால கையேடு
அவசர காலங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து விளக்கும் அவசர கால கையேடு ஒன்றை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் வெளியிட்டுள்ள அவசர கால கையேடு
போர், சைபர் தாக்குதல், பருவநிலை மாற்றம், கொள்ளைநோய்கள் போன்ற விடயங்களால் சாதாரண வாழ்க்கை 72 மணி நேரம் வரை பாதிக்கப்படும் நிலையில், அதை சமாளிப்பது எப்படி என்பதை விளக்கும் வகையில் பிரான்ஸ் அரசு தன் குடிமக்களுக்காக அவசர கால கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

’Tous responsables’ அதாவது, ஆங்கிலத்தில் All Responsible என பெயரிடப்பட்டுள்ள அந்தக் கையேடு, நேற்று, அதாவது, நவம்பர் மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கையேட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
அந்தக் கையேட்டில், போர் முதலான அவசர கால தேவைகளுக்காக, மூன்று நாட்களுக்குத் தேவையான சில பொருட்களை சேமித்துவைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை என்னவென்றால், தண்ணீர், எளிதில் கெட்டுப்போகாத உணவு, அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகள், டார்ச் மற்றும் பேட்டரிகள், பேட்டரியால் இயங்கும் ரேடியோ, முக்கியமான ஆவணங்களை ஒரு தண்ணீர் புகாத கவரில் போட்டு வைத்துக்கொள்ளுதல் கொஞ்சம் ரொக்கப்பணம்.
மேலும், குழந்தைகள் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கான விடயங்கள், செல்லப்பிராணிகள் இருந்தால் அவற்றிற்கான உணவு முதலான விடயங்கள்.
மொத்தத்தில் மூன்று விடயங்கள் குறித்து அந்தக் கையேடு அறிவுறுத்துகிறது. 1, தயாராக இருத்தல், 2, பாதுகாப்பாக இருத்தல், 3, மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுதல்.
இந்தக் கையேடு வழங்கப்பட்டதுமே மக்கள் சிலர் கவலையும் குழப்பமும் அடைய, இந்தக் கையேடு முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காகத்தான், பயப்படுவதற்காக அல்ல என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |