பாரிஸ் உட்பட 11 பெருநகரங்களில் தொற்று அதிகரிப்பு.. விரைவில் இது பிரான்ஸை தாக்கும்! அரசு எச்சரிக்கை
கொரோனாவின் நான்காவது அலை தொற்றுநோய் விரைவில் பிரான்சைத் தாக்கும் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் தீவிரமான டெல்டா மாறுபாடு தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரான்சில் தற்போது உள்ள மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளில் 40 சதவிதம் டெல்டா மாறுாபடு என பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் குறிப்பாக பாரிஸ் உட்பட 11 பெருநகரங்களில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவதாக அட்டால் கூறினார்.
கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அரசாங்கம் அடுத்த திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தும் என்றும், மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சாத்தியமான அனைத்து சூழ்நிலைகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அட்டால் கூறினார்.
புதிய நடவடிக்கைகளில் சுகாதார ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி சேர்க்கப்படலாம் என்பதை அட்டால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.