ஜப்பான் நாட்டுப் பெண் ஒருவருக்கு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்த பிரான்ஸ்: பின்னணி
பிரான்ஸ் நாட்டவர் ஒருவரின் மனைவியான, ஜப்பான் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாரீஸ் நீதிமன்றம் ஒன்று சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டவரான Vincent Fichot (39) என்பவர், டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாடுப் போட்டிகள் நடைபெற்றபோது, விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரதம் இருந்ததால் கவனம் ஈர்த்தார்.
விடயம் என்னவென்றால், Vincentஇன் மனைவி ஒரு ஜப்பான் நாட்டுப்பெண். தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண், தம்பதியரின் பிள்ளைகள் இருவரையும் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், பிள்ளைகளைப் பார்க்கவும் Vincent அனுமதிக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், அந்தப் பெண், தம்பதியரின் பிள்ளைகள் இருவரையும் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், பிள்ளைகளைப் பார்க்கவும் Vincent அனுமதிக்கப்படவில்லையாம்.
Vincent, ஜப்பான் பொலிசாரிடம் புகாரளித்தும், அவர்கள் இந்த விடயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
ஆகவே, தற்போது பாரீஸ் நீதிமன்றம் ஒன்று அந்தப் பெண்ணுக்கு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.