சினிமா பாணியில் சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டவர்: கூடுதலாக 14 ஆண்டுகள் சிறை
சினிமா பாணியில் சிறையிலிருந்து ஹெலிகொப்டரில் தப்பிய பிரான்ஸ் நாட்டுக் கொள்ளைக் கூட்டத்தலைவனான ஒருவருக்கு, நீதிமன்றம் ஒன்று மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சினிமா பாணியில் ஹெலிகொப்டரில் சிறையிலிருந்து தப்பிய பிரான்ஸ் நாட்டு கேங்ஸ்டர்
2018ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1ஆம் திகதி, பிரபல கொள்ளை கும்பல் தலைவனான Rédoine Faïd (46) என்னும் நபர் சிறையை உடைத்து ஹெலிகொப்டரில் தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Credit: AFP
பொலிசார் ஒருவரை பலி வாங்கிய கொள்ளை முயற்சி சம்பவம் ஒன்றின் மூளையாக செயல்பட்டதற்காக 25 ஆண்டுகள் Rédoineக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பக்காவாக திட்டமிட்டு, சிறைக்குள்ளேயே ஹெலிகொப்டர் ஒன்றைக் கொண்டு இறக்கிய தனது உறவினர்கள் உதவியுடன் தப்பிச் சென்றார் அவர்.
Credit: EPA
அதைத் தொடர்ந்து, தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டு Rédoineஉடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பொலிசார், அவர் இதுவரை பர்தா அணிந்து பொலிசார் கண்களிலிருந்து தப்பி வந்ததைக் கண்டுபிடித்தனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றி வளைத்துக் கைது செய்த பொலிசார்
Rédoine தப்பியதிலிருந்தே சிறை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் உறுப்பினர்களின் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்துவந்த பொலிசாரின் கண்களில், Rédoine வளர்ந்த நகராகிய Creil நகரில் ஒரு இளம்பெண் சிக்கினாள்.
Credit: EPA
அவள் தனது காரில் பர்தா அணிந்த ஒரு நபரை ஏற்றினாள். அந்த நபரின் உருவமோ ஆணைப் போல் இருந்தது. பர்தா அணிந்த அந்த பெண் காரிலிருந்து இறங்கி ஃப்ளாட்டுக்குள் நுழைய, அவரை பின் தொடர்ந்து பர்தா அணிந்த இன்னொரு பெண்ணும் அதே ஃப்ளாட்டுக்குள் நுழைய, அது Rédoine மற்றும் அவரது சகோதரரான Rachidஆகத்தான் இருக்கும் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே, பிரான்ஸ் பொலிசார் ஏராளமானோர் அந்த ஃப்ளாட்டுக்குள் அதிரடியாக நுழைய, அங்கிருந்தது Rédoine மற்றும் Rachid என்பது தெரியவரவே, அவர்கள் இருவர் உட்பட அங்கிருந்த நான்கு பேரைக் கைது செய்தனர்.
சினிமா பார்த்து திருடக் கற்றுக்கொண்டதாக கூறிய Rédoine
இந்நிலையில், நீதிமன்றத்தில் தான் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கேங்ஸ்டர் திரைப்படங்களைப் பார்த்து கொள்ளையடிக்கக் கற்றுக்கொண்டதாக Rédoine தெரிவித்தார்.
அவர் சொன்னது போலவே, பத்தே நிமிடங்களில் சிறையிலிருந்து ஹெலிகொப்டர் உதவியுடன் தப்பியிருந்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது போர் அடிக்கும் என்பதற்காகவே, தப்பிச் செல்ல திட்டமிட்டதாகவும் தெரிவித்தார் Rédoine.
Rédoineக்கு ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஹெலிகொப்டர் உதவியுடன் தப்பியதற்காக, தற்போது அவருக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |