இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்: ஆதாரங்களை சேமித்துவைத்த தாய்

France
By Balamanuvelan Feb 12, 2026 10:52 AM GMT
Report

பிரான்சில், முகமூடி அணிந்த சிலர் இளம்பெண் ஒருவரை சீரழித்த நிலையில், அவரது தாய் ஆதாரங்களை பத்திரமாக சேமித்துவைத்ததால் அவர்கள் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்

மேற்கு பிரான்சில் வாழ்ந்துவந்த இளம்பெண்ணொருவர், 2020ஆம் ஆண்டு பாரீஸுக்கு வந்துள்ளார்.

அப்போது அவரது நண்பர்கள் அவரை அறை ஒன்றில் தனியாக கைவிட்டுச் செல்ல, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் எட்டு பேர் அவரை தாக்கி வன்புணர்ந்துள்ளனர். 

இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்: ஆதாரங்களை சேமித்துவைத்த தாய் | France Jailed 3 Men After Mother Save Evidence

தன்னை சிலர் தாக்க, சிலர் சீரழிக்க, மற்றவர்கள் அதைப் பார்த்து சத்தமாக சிரித்துக்கொண்டிருந்ததாகவும், ஒருவன் தன்னை கழுத்தில் அடிக்க, தான் சுயநினைவிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நடுக்கத்துடன் வீடு திரும்பிய அந்த இளம்பெண், தன் தாயிடம் கண்ணீருடன் தனக்கு நடந்த அநியாயம் குறித்துக் கூறியதுடன், பொலிசாரிடம் செல்லத் தான் தயாராக இல்லை என்றும் கூற, மகளுக்கு ஆறுதல் கூறிய தாய், சமயோகிதமாக ஒரு விடயத்தைச் செய்துள்ளார். 

ரயில் பாதையில் ஓடும் கார்கள்: பிரான்சின் வித்தியாசமான திட்டம்

ரயில் பாதையில் ஓடும் கார்கள்: பிரான்சின் வித்தியாசமான திட்டம்

ஆம், தன் மகளின் உடைகளில் குற்றவாளிகளின் DNA இருக்கும் என்பதை உணர்ந்த அந்தத் தாய், மகளுடைய லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடைகளை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு பத்திரமாக சேமித்துவைத்துள்ளார்.

2021ஆம் ஆண்டு அந்த இளம்பெண் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக, அவரது தாய் தான் சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.

அந்த இளம்பெண்ணின் உடைகளிலிருந்த DNAவின் அடிப்படையில் நான்கு பேரைக் கைது செய்துள்ளார்கள் பொலிசார்.

அப்போது அவர்களில் இருவருக்கு 15 வயது மட்டுமே. ஆனால், இப்போது அவர்களுக்கு வயது வந்துவிட்டதால் அவர்களில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இன்னொருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்: ஆதாரங்களை சேமித்துவைத்த தாய் | France Jailed 3 Men After Mother Save Evidence

நேற்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று பேர் மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.

பிரான்சைப் பொருத்தவரை, வன்புணரப்படும் பெண்களில் 90சதவிகிதம் பேர் வரை வழக்குத் தொடர்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US