பிரான்சில் வேலை இல்லாதவர்கள்க்கு 1000 யூரோ ஊக்குவிப்புத் தொகை! அமைச்சர் முக்கிய அறிவிப்பு
பிரான்சில் வேலை இல்லாதவர்களுக்கு 1000 யூரோ ஊக்குவிப்புத் தொகை வழங்கவுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் படித்தும் வேலை இல்லாமல் சிலர் வெளிநாடுகளுக்கு செல்வதும், சிலர் சொந்த நாடுகளிலே தொடர்ந்து வேலை தேடி வருவதுமாக உள்ளனர்,
அப்படி, பிரான்சில், நீண்ட காலமாக வேலை தேடும் நபர், நிறுவனத்தில் பதிவு செய்திருந்தால் அவர்கள் தேடும் வேலைக்காக, நிறுவனங்களில் பயிற்சி பெற முன்வருபவர்களிற்கு, உதவித் தொகை வழங்க உள்ளதாக, பிரான்சின் தொழிற்துறை அமைச்சர் Élisabeth Borne கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நீண்ட காலமாக வேலையில்லாமல் தவித்து வருபவர்கள், வேலை தேடும் நிறுவனம் ஆன, Pôle Emploi-வில் பதிவு செய்திருந்தால், அவர்கள் தாங்கள் தேடும் வேலைக்கான பயிற்சியில், நிறுவனங்களில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களுக்கு 1000 யூரோ ஊக்குவிப்புத் தொகை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
பயிற்சியின் ஆரம்பத்தில் பாதித் தொகையும், பயிற்சி முடிவில் மீதித் தொகையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.