பிரான்சில் நடைமுறைக்கு வந்துள்ள Johnson & Johnson's தடுப்பூசியால் பக்களவிளைவுகளா? கிடைத்த தெளிவான விளக்கம்
பிரான்சில் தற்போது புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள Johnson & Johnson's தடுப்பூசியால் பக்கவிளைவுகள் உள்ளதா என்பது குறித்த சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன் படி பிரான்சில் தற்போது Johnson & Johnson's தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால், இந்த தடுப்பூசியினால் ஏதேனும் பக்களவிளைவுகள் ஏற்படுமாக என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த சந்தேகத்ஹ்டை போக்கும் விதமாக l'Agence européenne du médicament இன்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், Johnson & Johnson's தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவு மிக மிக குறைவானதாக உள்ளதாகவும், இரத்தம் உறைதல் எனும் பக்க விளைவுக்கு மிகச்சிறிய அளவில் தொடர்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது மிக மிக அரிதான ஒரு நிகழ்வு எனவும் l'Agence européenne du médicament தெரிவித்துள்ளது.
அதே நேரம், பிரான்ஸ் சுகாதார அமைச்சகம், AstraZeneca மற்றும் இந்த Johnson & Johnson's தடுப்பூசிகள் மிகவும் அவசியமானவை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.