உக்ரைன் விவகாரம்... பிரான்ஸ் நேரடி யுத்தத்தில் குதிக்குமா? அச்சத்தில் மக்கள்
பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரான் மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான போரில் நேரிடையாகக் களமிறங்கி விடும் என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய நாளில் இருந்து, ரஷ்யாவுக்கும் உக்ரைனிற்கும் இடையிலான பேச்சுவாத்தையில் பிரான்ஸ் ஈடுபட்டு வருகிறது.
மட்டுமின்றி உக்ரைனிற்கான உதவிகள் அளிப்பதிலும் பிரானஸ் முக்கியத்துவம் வகித்து வருகின்றது. மேலும், நேட்டோ படைகளுக்காக ருமேனியாவில் 800 பிரெஞ்சுப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, இமானுவல் மேக்ரான் ஜனாதிபதியாக மீண்டும் பதவிக்கு வந்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான யுத்தத்தில் நேரடியாகக் களமிறங்கி விடு;ம் என்ற அச்சம் பிரெஞ்சு மக்களிடம் ஏற்பட்டு;ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புள்ளி விபர நிறுவனமான CSA முன்னெடுத்த கருத்துக் கணிப்பில் 10ல் 7 பேர் அதாவது 72% மக்கள் ரஷ்யாவுடனான யுத்தத்தில் பிரான்ஸ் நேரடியாகக் களமிறங்கும் ஆபத்து உள்ளது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.