ஹமாஸ் பிடியிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள்: அமைச்சர் தெரிவித்துள்ள செய்தி
ஹமாஸ் பிடியிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரை மீட்க, பிரான்ஸ் அரசு தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்.
ஹமாஸ் பிடியிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள்
நேற்று, அதாவது, ஞாயிற்றுக்கிழமையன்று, ஹமாஸ் அமைப்பு, பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த மூன்று இஸ்ரேலியர்களை விடுவித்தது.
இஸ்ரேல், 90 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.
போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று இந்த நேர்மறையான விடயங்கள் நடைபெற்றன.
அடுத்த ஆறு வாரங்களில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் பிணைக்கைதிகள் பட்டியலில் பிரான்ஸ் இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களான Ofer Kalderon மற்றும் Ohad Yahalomi ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Jean-Noel Barrot, அவர்கள் இருவரும் விடுவிக்கப்படும் வரை பிரான்ஸ் அரசு தொடர்ந்து போராடும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |