மரண தண்டனை தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலன் தலைமையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் உலகளவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான பரப்புரையை தொடங்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலிக்கு தலைமை பிரான்ஸ் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஆண்டும் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை எண்ணிக்கையை அறிக்கை செய்ய வேண்டும் என ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வர மற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும்.
மரண தண்டனைக்கு தடை விதித்த உலகின் 35 வது நாடு பிரான்ஸ் ஆகும். பிரான்சில், கருத்துக் கணிப்புகளின்படி, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் கடுமையாகப் பிளவுபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வலதுசாரி பத்திரிகையாளர் Eric Zemmour கொள்கை அடிப்படையில் மரண தண்டனையை ஆதரிப்பதாகக் கூறினார்.