ஐரோப்பாவின் முதல் Tokenised Stock Exchange பிரான்சில் தொடக்கம்
பிரான்ஸ், ஐரோப்பாவில் முதன்முறையாக முழுமையான Tokenised பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Lightning Stock Exchange” (Lise) என அழைக்கப்படும் இந்த புதிய சந்தை, 24/7 நேரத்தில் செயல்படும் திறனுடன், trading மற்றும் settlement ஆகியவற்றை blockchain தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைக்கிறது.
Tokenised Stock Exchange என்பது பங்குகள் மற்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளை blockchain தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றி பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய முறை ஆகும்.
Lise பங்குச் சந்தை, Distributed Ledger Technology (DLT) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது சந்தை மற்றும் post-trade functions ஆகியவற்றை ஒரே கட்டமைப்பில் இணைக்கும் ஐரோப்பாவின் முதல் பங்குச் சந்தையாகும்.
இந்த திட்டத்திற்கு ACPR, Banque de France, AMF, European Securities and Markets Authority, Eurosystem மற்றும் European Central Bank ஆகியவற்றின் அனுமதி கிடைத்துள்ளது.
Lise திட்டத்திற்கு Caceis (Credit Agricole Group), BNP Paribas மற்றும் Bpifrance ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. இது, ஐரோப்பிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs, mid-caps) முதலீட்டாளர்களை எளிதாக அணுகும் வாய்ப்பை வழங்கும்.
2026 தொடக்கத்தில் முதல் IPOs (Initial Public Offerings) நடைபெறவுள்ளன.
Lise CEO Mark Kepeneghian, “Tokenisation என்பது உலகளாவிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் இயக்கமாகும். Lise மூலம், நாங்கள் உண்மையான Tokenised கட்டமைப்பை உருவாக்கி, சேமிப்புகளை உண்மையான பொருளாதாரத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, Distributed Ledger Technology Pilot Regime-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நவீன நிதி கட்டமைப்பை உருவாக்கும் முக்கியமான படியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |