பிரான்சின் லிமோஜஸ் நகராட்சி அலுவலகம் தீ வைப்பு சம்பவம்: 34 வயதுடைய நபர் கைது
பிரான்ஸில் லிமோஜஸ் நகராட்சி அலுவலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 34 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிமோஜஸ் நகராட்சி அலுவலகத்தில் தீ
பிரான்சில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரங்கள் மிகப்பெரிய அளவில் நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸின் வடக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிலைமை மிக மோசமானதாக இருப்பதை கண்டித்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின பிரச்சினையாக உருவெடுத்து தற்போது போராட்டமாக வெடித்துள்ளது.
இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறிய தோடு, பல்வேறு பொது சொத்துக்கள் கலவரக்காரர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரான்சின் வரலாற்று சிறப்புமிக்க லிமோஜஸ் நகராட்சி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து சம்பவத்தின் காரணமாக அலுவலகத்தின் புகழ்பெற்ற மணிக்கூண்டு இடிந்து விழுந்துள்ளது.
இது தொடர்பான காட்சிகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
34 வயதுடைய நபர் கைது
இந்நிலையில் லிமோஜஸ் நகராட்சி அலுவலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 34 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிர இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், Haute-Vienne துறையில் உள்ள Val-d'Issoire பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.