பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளை: இது முதல் முறையல்ல
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்தில் நேற்று நடந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளை
ஞாயிற்றுக்கிழமை, பாரீஸில் அமைந்துள்ள Louvre அருங்காட்சியகத்தில் இருந்த விலைமதிப்பற்ற ஒன்பது அரிய பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது முதல் முறையல்ல
விடயம் என்னவென்றால், Louvre அருங்காட்சியகத்தில் இப்படி கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல!
1911ஆம் ஆண்டு, Vincenzo Peruggia என்பவர், புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தைத் திருடிச் சென்றார்.
1913ஆம் ஆண்டு, அவர் அதை இத்தாலியிலுள்ள ஃப்ளாரன்ஸ் என்னுமிடத்தில் விற்கமுயன்றபோது கையும் களவுமாக சிக்கினார்.
1971ஆம் ஆண்டு, The Wave என்னும் ஓவியத்தை Louvre அருங்காட்சியகத்திலிருந்து சில திருடர்கள் திருடிச் சென்றார்கள். இதுவரை அந்த ஓவியம் கிடைக்கவில்லை!
1922ஆம் ஆண்டு, புகழ் பெற்ற யூத செல்வந்தரான Rothschild குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கிய இரண்டு அரிய கலைப்பொருட்கள், 1983ஆம் ஆண்டு Louvre அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டன.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு, Bordeaux நகரில் ராணுவ நிபுணர் ஒருவர் அந்த பொருட்களை அடையாளம் கண்டதையடுத்து அவை மீட்கப்பட்டன.
நேற்றைய திருட்டைப் பொருத்தவரை, கொள்ளைச் சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டதாக கருதப்படும் நிலையில், பொலிசார் அவர்களை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.