ஆப்கானிஸ்தானில் மக்கள் அச்சத்தில் தவிக்கும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியின் சுயநலமான அறிக்கை
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருக்கும் மக்கள் உயிர் பயத்தில் தவித்துக்கொண்டிருக்க, பிரான்ஸ் ஜனாதிபதியோ சுயநலமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய முற்படலாம் என்று கூறியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அதனால் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரிக்கலாம் என்றும், அந்த நிலையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் சுயநலமாக பேசியுள்ளார்.
சிரியா உள்நாட்டுப்போர் காரணமாக ஐரோப்பாவுக்குள் ஏராளமான புலம்பெயர்ந்தோர் நுழைந்ததைப் போல, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, இப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்வோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவார்களோ என்ற கவலை ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து ஐரோப்பாவுக்குள் மக்கள் புலம்பெயரும் விடயம் பெரும் பிரச்சினையாக இருக்கும் என இமானுவல் மேக்ரான் கருதுகிறார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இப்படி அஞ்சுவது பிரான்ஸ் மட்டுமல்ல, ஜேர்மனி, கிரீஸ் ஆகிய நாடுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.