நவம்பர் 1ஆம் திகதி முதல்... மீண்டும் எல்லைக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யும் பிரான்ஸ்
நவம்பர் 1ஆம் திகதி முதல், மீண்டும் எல்லைக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது பிரான்ஸ்.
அடுத்த ஆண்டுவரை எல்லைக் கட்டுப்பாடுகள்
பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை எல்லைக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ்.
ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் எல்லைக்கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரப்போவதில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் ஐரோப்பிய ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.
தற்போதுள்ள எல்லைக்கட்டுப்பாடுகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 1ஆம் திகதி, புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |