கர்ப்பிணியைக் குதறிக் கொன்ற நாய்: காதலருக்கு சிறை
பிரான்சில், கர்ப்பிணி ஒருவரை நாய் ஒன்று கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக பலியானார்.
கர்ப்பிணியைக் குதறிக் கொன்ற நாய்
பிரான்சின் Soissons நகரில் வாழ்ந்துவரும் கிறிஸ்டோப் (Christophe Ellul, 51), அமெரிக்காவிலிருந்து American pit bull terrier வகை நாய் ஒன்றை இறக்குமதி செய்து வளர்த்துவந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு, கிறிஸ்டோபின் காதலியான எலிசா (Elisa Pilarski, 29) அந்த நாயை வெளியே அழைத்துச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது அவரை கடித்துக் குதறியுள்ளது. அப்போது எலிசா ஆறு மாத கர்ப்பிணி!
பணியிலிருந்த கிறிஸ்டோபை மொபைலில் அழைத்த எலிசா, நாய் தன்னைக் கடித்துக் குதறிவிட்டதாகவும், தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
பின்னர், உடல் முழுவதும் 50 இடங்களில் கடித்துக் குதறப்பட்ட நிலையில் எலிசாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
விடயம் என்னவென்றால், இந்த வகை நாய்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றை இறக்குமதி செய்வது பிரான்சில் சட்டவிரோதமாகும்.
இந்த வழக்கில், நேற்று Soissons நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக நாயை இறக்குமதி செய்து எலிசாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த கிறிஸ்டோபுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணியான எலிசாவின் கோர மரணத்துக்குக் காரணமான அந்த நாயை கருணைக்கொலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |