பிரான்ஸில் பள்ளி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்: ஆசிரியர் குத்திக் கொலை..! பள்ளிகள் மூடல்
பிரான்ஸில் அல்லாஹு அக்பர் என்று முழக்கமிட்டு கொண்டு இருந்த நபர் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியருக்கு கத்திக்குத்து
பிரான்ஸ் நாட்டின் அராஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பள்ளி மீது தாக்குதலில் நடத்தினார். அல்லாஹு அக்பர் என்று கத்தி முழக்கமிட்டு அந்த நபர் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பதாக பிரான்ஸின் BFM TV செய்தி வெளியிட்டுள்ளது.
பள்ளி மீது தாக்குதல் நடத்திய நபர் செச்சென் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என ஊடக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் மூடல்
இளைஞரின் தாக்குதலை தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாதுகாப்பு காரணங்கள் கருதி மூடப்பட்டது.
மேலும் தாக்குதலை முன்னெடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்து இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானின் தெரிவித்துள்ளார்.
AFP
BFMTV செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்திய நபர் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டதாக பொலிஸ் வட்டாரத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
இதுவரை தாக்குதல் நடத்திய நபரின் நோக்கங்கள் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |