அர்ஜென்டினாவிடம் தோல்வி.. 2026 உலகக்கோப்பை வரை.. பிரான்ஸ் அணி மேலாளரின் ஒப்பந்தம் நீட்டிப்பு
பிரான்ஸ் கால்பந்து அணியின் மேலாளரின் ஒப்பந்தம் அடுத்த உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Didier Deschamps
கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரை பிரான்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அணியின் மேலாளர் Didier Deschamps சிறப்பாக வீரர்களை வழி நடத்தினார். ஆனால் கத்தாரில் அவரால் உலகக்கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.
@Anne-Christine Poujoulat/AFP
அர்ஜென்டினாவிடம் தோல்வியை சந்தித்த பிறகு அவர் பதவியில் இருந்து விலகுவார் என்று செய்திகள் உலா வந்தன.
ஒப்பந்தம் நீட்டிப்பு
இந்த நிலையில் அவரது ஒப்பந்தம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் Deschamps-யின் புதிய ஒப்பந்தம் சூன் 2026 உலகக்கோப்பையில் இறுதி வரை நீட்டித்துள்ளது.
பாரிஸ் நகரில் நடந்த பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையின் போது Deschamps இதனை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஜனாதிபதியின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அவரது தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நான் வெளிப்படையாக நன்றி கூறுகிறேன்' என தெரிவித்தார்.
@Getty