பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில் பெருவெள்ளம்: இரண்டாவது புயல் ஏற்படுத்திய பாதிப்பு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் என்னும் தீவு பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் கடல் கடந்த பிரதேசத்தில் பெருவெள்ளம்
இந்தியப் பெருங்கடலில், பிரான்சுக்கு சொந்தமான மயாட் (Mayotte) என்னும் தீவு அமைந்துள்ளது.
கடந்த மாதம் மயாட் தீவை Chido என்னும் புயல் துவம்சம் செய்தது.
இந்நிலையில், மீண்டும் Dikeledi என்னும் புயல் அத்தீவைத் தாக்கியுள்ளது.
புயல் காரணமாக மயாட் தீவில் பெருவெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரிகள் தீவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை, இன்று மாலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Heavy flooding due to cyclone Dikeledi in Mayotte, France 🇫🇷 (12.01.2025) pic.twitter.com/RxM6acZdDN
— Disaster News (@Top_Disaster) January 12, 2025
பெருவெள்ளம் காரணமாக சுமார் 14,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு அவசர உதவி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீவில் பெருவெள்ளம் கரைபுரண்டோடுவதை சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |