பிரான்சில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த புலம்பெயர்ந்த பெண்: தீர்ப்பு விரைவில்
பிரான்சில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், பிரெஞ்சு சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
புலம்பெயர்ந்த பெண் செய்த பயங்கர செயல்
2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, லோலா (Lola Daviet, 12) என்னும் பிரெஞ்சு சிறுமி, பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.
மாலை 3.00 மணியளவில், அவளது வீட்டின்முன், அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த டாபியா (Dahbia Benkired, 27) என்னும் இளம்பெண், லோலாவை சந்தித்துள்ளார். அதற்குப் பின் லோலாவைக் காணவில்லை.
மகளைக் காணாததால் பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, CCTV கமெராவில் லோலாவை டாபியா சந்திக்கும் காட்சிகளும், அதற்குப் பின் டாபியா தன்னைச் சுற்றி சூட்கேஸ்கள் மற்றும் பெரிய இரும்புப் பெட்டி ஒன்றுடன் இருக்கும் காட்சிகளும் கிடைத்தன.
பின்னர், டாபியா வைத்திருந்த அந்த இரும்புப் பெட்டி தெருவோரமாக கண்டெடுக்கப்பட்டது. பெட்டிக்குள் சிறுமி லோலா சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.
அவள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாள்.
இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் Marine Le Penஇன் வலதுசாரி எதிர்க்கட்சி அதை புலம்பெயர்தல் தொடர்பில் அரசியலாக்க முனைய, ஒரு சிறுபிள்ளையின் மரணத்தை அரசியலாக்கவேண்டாம் என அமைச்சர்கள் வற்புறுத்த விடயம் பெரிதாகாமல் அடங்கியது.
தீர்ப்பு விரைவில்
குற்றம் சாட்டப்பட்டுள்ள டாபியா மாற்றி மாற்றிப் பேச, அவரை பல மனோவியல் நிபுணர்களும் மன நல மருத்துவர்களும் பரிசோதித்து, கடைசியாக அவர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என முடிவு செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக டாபியா சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லோலா வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும், டாபியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |