பாரீஸ் இடைத்தேர்தல்: முன்னாள் பிரதமருடன் மோதும் சர்ச்சைப் பெண் அமைச்சர்
பாரீஸ் தொகுதி ஒன்றில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பிரான்ஸ் முன்னாள் பிரதமரும் இந்நாள் அமைச்சர் ஒருவரும் மோதிக்கொள்ள இருக்கிறார்கள்.
பாரீஸ் இடைத்தேர்தல்
பாரீஸ் 2ஆவது நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Jean Laussucq என்பவர் ஊழல் புகாரின்பேரில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரான்ஸ் முன்னாள் பிரதமரான மிஷெல் பார்னியேர் அந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சார்ந்த அதே The Republicans கட்சியைச் சார்ந்த ரச்சிதா டதி (Rachida Dati, 59)யும் அதே தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த ரச்சிதா, தற்போது பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.
விடயம் என்னவென்றால், ரச்சிதா மீதும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |