பிரான்சில் பரபரப்பை உருவாக்கிய தாக்குதல் சம்பவம்: தாக்குதல்தாரி வெளிநாட்டில் சரண்
பிரான்சில் பெரும் பரபரப்பை உருவாக்கிய மசூதி தாக்குதலை நிகழ்த்திய தாக்குதல்தாரி, இத்தாலி நாட்டில் சரணடைந்துள்ளார்.
பிரான்சில் பரபரப்பை உருவாக்கிய தாக்குதல்
வெள்ளிக்கிழமையன்று, தெற்கு பிரான்சில் உள்ள ஒரு மசூதியில், இஸ்லாமியர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
கடும் அதிர்ச்சியை உருவாக்கிய அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், மதத்தை அடிப்படையாகக் கொண்ட இனவெறி மற்றும் வெறுப்புக்கு பிரான்சில் இடமில்லை என்றும், வழிபாட்டு சுதந்திரத்தை மீற முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
தாக்குதல்தாரி வெளிநாட்டில் சரண்
இந்நிலையில், தாக்குதல்தாரி இத்தாலியிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரி என்னும் முறையில் இது திருப்தியளிக்கும் ஒரு செய்தி என்று கூறியுள்ள Abdelkrim Grini என்னும் அந்த அதிகாரி, இந்த தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தாக்குதல்தாரிக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அதுதான் அவர் எடுத்த சரியான முடிவாக இருக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |