பிரான்ஸில் நடைமுறைக்கு விரைவில் வரும் புதிய யூரோ நாணயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் புதிய வடிவிலான இரண்டு யூரோ நாணயத்தை வெளியிட்டார்.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், நேற்று(09.12.2021) புதிய வடிவிலான புதிய 2 யூரோ நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நாணயத்தை Monnaie de Paris-ன் பிரபல வடிவமைப்பாளரான Joaquin Jimenez வடிவமைத்துள்ளார்.
இந்த புதிய நாணயம் வெளியிட்டது குறித்து இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், வரும் 2022-ஆம் ஆண்டிற்கான Conseil de l’Union européenne-க்கு பிரான்ஸ் சார்பாக போட்டியிடுவதை நினைவுகூரும் விதமாக இந்த புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய நாணயம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.