பிரான்சில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: உடனடியாக எழுந்த எதிர்ப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் புறநகர்ப்பகுதி ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட கருப்பினத்தவர் ஒருவர்.
உடனடியாக, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக இனவெறுப்புக் கருத்துக்கள் பரவத் துவங்கிவிட்டன!
மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்
பாரீஸ் புறநகர்ப்பகுதியான Saint-Denis என்னுமிடத்தின் மேயராக Bally Bagayoko (52) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாலி நாட்டவர்களான பெற்றோருக்குப் பிறந்த Bally, கருப்பினத்தவர் ஆவார்.

Bally மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதுமே, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக இனவெறுப்புக் கருத்துக்கள் பரவத் தொடங்கின.
நாட்டில் அதிகம் பேரால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே Ballyக்கு எதிரான கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டன.
எதிர்புக்கு நடுவே ஆதரவு
இந்நிலையில், இனவெறுப்புக்கு எதிராகவும், Ballyக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சனிக்கிழமையன்று Saint-Denisஇல் திரண்டு பேரணி நடத்தினார்கள்.

மேலும், பிரான்ஸ் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு முதல், பல்வேறு அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் Ballyக்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், பாரபட்சத்துக்கு எதிரான துறை அமைச்சரான Aurore Berge பேரணியில் கலந்துகொள்ளவில்லை.
என்றாலும், Aurore தன்னை தொலைபேசியில் அழைத்து தனக்கு அவரது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டதாக Bally தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |