புதிய அணு ஆயுத விமானத்தளத்தை உருவாக்கும் பிரான்ஸ்
ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக, பிரான்ஸ் புதிய அணு ஆயுத விமானத்தளத்தை உருவாக்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, Rafale F5 போர்விமானங்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட உள்ளன.
2035-ஆம் ஆண்டுக்குள், ஜேர்மனி எல்லைக்கு அருகிலுள்ள Luxeuil-Saint-Sauveur விமானத்தளத்தில் ரஃபேல் F5 விமானங்கள் ASN4G ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகளுடன் செயல்படும் என மார்ச் 18-ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
இந்த புதிய அணு ஆயுத திட்டம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேட்டோவிலிருந்து அமெரிக்காவை விலக்கக்கூடும் என்ற அபாயத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று மேக்ரான் தெரிவித்தார்.
விமானத்தள மேம்பாடு & செலவுகள்
Luxeuil-Saint-Sauveur விமானத்தள மேம்பாட்டுக்கு 1.5 பில்லியன் யூரோ செலவிடப்படும்.
2035-க்குள், இரண்டு ரஃபேல் படைப்பிரிவுகள் (squadrons) இந்த விமானத்தளத்தில் செயல்படும். ஒரு படைப்பிரிவில் 20 விமானங்கள் இடம்பெறும்.
2032ல் முதல் படைப்பிரிவு நிறுத்தப்படும், அதன் செயல்பாடு 2033-ல் தொடங்கப்படும், இரண்டாவது படைப்பிரிவு 2036-ல் இயங்கும்.
புதிய ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணை
இந்த ரஃபேல் F5 போர்விமானங்கள், ASN4G ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகளை ஏந்தும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த புதிய ஏவுகணை, தற்போதைய ASMPA (Air-Sol Moyenne Portee Ameliore) சூப்பர்சோனிக் அணு ஏவுகணைக்கு மாற்றாகபயன்படுத்தப்படவுள்ளது.
பிரான்ஸ் அணு ஆயுத விமானத்தளங்கள்
Luxeuil-Saint-Sauveur விமானத்தளம் உருவான பிறகு, பிரான்ஸ் நாட்டில் நான்கு அணு ஆயுத விமானத்தளங்கள் இருக்கும்.
மற்ற மூன்று அணு விமானத்தளங்கள்:
- Saint-Dizier
- Istres
- Avord
இதில், மொத்தம் 50 ரஃபேல் விமானங்கள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் தயார் நிலையில் உள்ளன.
பிரான்ஸ் பாதுகாப்பு செலவு & எதிர்காலத் திட்டங்கள்
உக்ரைன்-ரஷ்யா போர் நீடிப்பதை தொடர்ந்து, ஜேர்மனியும் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதேபோல், மேக்ரான், தற்போதைய பாதுகாப்பு செலவாக உள்ள 2 சதவீதத்தை 3.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
இதனால், பிரான்ஸ் பாதுகாப்பு துறையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படும், மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |