பிரான்சில் அதிவேகத்தில் காரை செலுத்திய சாரதி... சிறை செல்லும் அபாயம்
பிரான்சில் அதிவேகத்தில் காரை செலுத்திய சாரதி ஒருவர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டம்
பிரான்சில் முன்பெல்லாம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்துக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டுவோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 3,750 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.
அத்துடன், குற்றச்செயல்கள் செய்தவர்கள் பட்டியலிலும் அவர்களுடைய பெயர் இடம்பெறும்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று, வட பிரான்சில் 29 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் A4 நெடுஞ்சாலையில் மணிக்கு 209 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓட்டியுள்ளார்.
அவரது காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சனிக்கிழமையன்று, மற்றொருவர் தனது காரை மணிக்கு 193 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்தியுள்ளார். அந்த குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் மணிக்கு 110 முதல் 130 கிலோமீற்றர் வேகம் வரை செல்லவே அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |