பிரான்சில் கொரோனா குறைந்து வரும் நிலையில் அடுத்து 15 நாட்கள் ஆபத்தானவை! தலைகீழாகவே மாற வாய்ப்பு: எச்சரிக்கும் பிரபல மருத்துவர்
பிரான்சில் எதிர்வரும் 15 நாட்கள் ஆபத்தானவை என்று பஸ்தர் நிறுவனத்தின் நிபுணரும் மருத்துவப் பேராசிரியருமான அர்னாட் பாண்டாண்ட் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறத். கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
8,541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,666,113-ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109,402- ஆகவும் அதிகரித்துள்ளது. தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000-க்கும் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக இல்-து-பிரான்சில் மட்டுமே 887 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரான்சில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். தளர்வுகளும் அங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தின் விஞ்ஞானக்குழுவில் இருப்பவரும், பஸ்தர் நிறுவனத்தின் தொற்றியல் நிபுணரும் மருத்துவப் பேராசிரியருமான Arnaud Fontanet, அடுத்து வரும் 15 நாட்கள் மிகவும் ஆபத்தானவை எஎன்று எச்சரித்துள்ளார்.
மக்கள் விடுமுறைகளில் செல்லும்போது, மிகவும் கவனமாக சுகாதாரப் பாதுகாப்புகளைப் பின்பற்ற வேண்டும். எச்சரிக்கையாக இல்லாவிட்டால், ஒரு மரபணுத் திரிவடைந்த கொரோனா வைரஸ் பரவி, அது நிலைமையே தலைகீழாக மாற்றிவிடும்.
இதனால் மீண்டும் மருத்துவமனைகளில் அழுத்தங்கள் அதிகரிக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், பள்ளிகள் மீண்டும் மூட வேண்டிய நிலைமை வரும் என்பதால், நாடு சகஜ நிலைக்கு திரும்பனாலும், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.