பிரான்ஸ் குடிமக்களுக்கு 4,000 யூரோ மானியம் அறிவிப்பு! இதை செய்தால் போதும்.,
கார்களுக்கு பதிலாக சைக்கிள் அல்லது இ-பைக்குகளுக்கு மாற விரும்புவோருக்கு பிரான்ஸ் 4,000 யூரோக்கள் வரை ஊக்கத்தொகையை வழங்குகிறது.
2024-ஆம் ஆண்டுக்குள், வேலைக்குச் செல்வதற்கும் மற்ற பயணங்களுக்கும் சைக்கிள்களைப் பயன்படுத்தும் குடிமக்களின் எண்ணிக்கையை 9 சதவீதமாக உயர்த்துவதை பிரான்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாசு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வைக் குறைக்க, கார்களுக்குப் பதிலாக மின்சார சைக்கிள்களைப் (e-bikes) பயன்படுத்துவதற்கு குடிமக்களுக்கு 4,000 யூரோ வரை மானியத்தை பிரான்ஸ் வழங்குகிறது. கிளாசிக் இரு சக்கர பைக்குகள், அதாவது சைக்கிள்களுக்கும் இந்த மானியத்தில் பொருந்தும்.
இருப்பினும், அனைவரும் சமமாக அதிகபட்ச ஊக்கத்தொகையை பெறமுடியாது. பிரெஞ்சு அரசாங்கம் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடிமக்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கிறது. அதிக வருமானம் உள்ள குடிமக்கள், அவர்களின் வருவாய்க்கு ஏற்றவாறு குறைந்த ஊக்கத்தொகையைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
iStock
தங்கள் கார்களை முற்றிலுமாக கைவிட விரும்பாத, ஆனால் தினசரி பயணத்திற்கு இ-பைக்குகளைப் பயன்படுத்த விரும்பும் குடிமக்களுக்கான ஊக்கத்தொகைகளையும் இந்த திட்டம் கருதுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிரெஞ்சு அரசாங்கம் 400 யூரோ வரை மானியம் வழங்கப்படவுள்ளது.
பிரான்சில் போக்குவரத்தை மிகவும் திறமையாகவும், நிலையானதாகவும் மாற்ற அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர். மக்களில் 9 சதவீதம் பேர் 2025-ஆம் ஆண்டுக்குள் சைக்கிள் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை பிரான்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாசுபடுத்துவதைத் தவிர, கார்கள் பிரான்சில் உள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. உண்மை என்னவென்றால், பெரும்பாலான வாகனங்களில் அதை ஓட்டுபவர்களைத் தவிர கூடுதல் பயணிகள் யாரும் இல்லை, பெருபாலும் காலியாக செல்கின்றன.
பிரான்சில் உள்ள மக்கள், அதிக மலிவு விலையில் நகர்ப்புற பயணங்களும் மற்றும் குறைந்த நெரிசலையும் எதிர்பார்க்கின்றனர். பாரிஸ் city center-ல் கார்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பாரிஸ் 2026-ஆம் ஆண்டளவில் முழுமையாக சைக்கிள் பாதைகள் கொண்ட நகரமாக மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.