தீவிரமாக பரவி வரும் Omicron வைரஸ்! பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரான்சில் ஒமைக்ரான் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த உடனடியாக தனிமைப்படுத்தி கொள்ளும் படி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலகையே மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்த முறை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை திரிபுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு Omicron என்று உலகசுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது.
மற்ற கொரோனா திரிபுகளை விட, இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வைரஸ் பிரித்தானியா, பெல்ஜியம், ஜேர்மனி போன்ற நாடுகளுக்குள் நுழைந்துவிட்டது.
இதனால் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் சுகாதார அமைச்சகம், இந்த வகை கொரோனா தொற்றார்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயம் அவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.