வெப்பநிலை உயர்வைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜூன் மாத துவக்கத்தில் மகரந்த துகள்களால் உருவாகும் ஒவ்வாமை அதிகம் அதிகமாக இருக்கும் என்பதால், பிரான்ஸ் முழுமைக்கும் அடுத்த சில நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அனைத்து departmentகளுக்குமே மிக அதிக எச்சரிக்கையான சிவப்பு அல்லது அடுத்த கட்ட எச்சரிக்கையான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காற்று தர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக காற்றில் மகரந்தம் அதிக அளவில் பரவுகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகமாக உள்ளதால் பிரான்சில் தற்போது இந்த பிரச்சினை உருவாகியுள்ளது. கொரோனா மீது கவனம் செலுத்துவதால், மருத்துவர்களால் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த இயலாமல் போக வாய்ப்புள்ளது.
ஆகவே, ஒவ்வாமை பிரச்சினைகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். துணிகள் மீது மகரந்தத்துகள் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துணிகளை வெளியே காயப்போடவேண்டாம்
. ஜன்னல்களை கூடுமானவரை மூடி வைத்திருக்கவும். வெளியே சென்று வந்ததும், உடைகளை மாற்றுதல், குளித்தல், தலை முடியை அலசுதல் நன்மை பயக்கும்.
எளிதில் கிடைக்கக்கூடிய antihistamines என்னும் ஒவ்வாமைக்கு பயன்படுத்தப்படும்
மருந்துகளையும் nasal sprayக்களையும் பயன்படுத்தலாம்.
வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவதும், மகரந்தத்துகள் மூக்கிலோ வாயிலோ
செல்லாமல் தடுக்க பெருமளவில் உதவும்.