ராணுவ தளத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய பிரான்ஸ் ராணுவம்
பிரான்சில், அணு ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர்மூழ்கிகள் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ தளம் ஒன்றின் மேல் பறந்த ட்ரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ தளத்தின் மேல் பறந்த ட்ரோன்கள்
வடமேற்கு பிரான்சில், பிரிட்டனி என்னுமிடத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில், பிரான்சுக்கு சொந்தமான நான்கு அணு ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர்மூழ்கிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அந்த ராணுவ தளத்தின் மேல் 5 மர்ம ட்ரோன்கள் பறந்துள்ளன.

உடனடியாக அந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த தளத்தின் செய்தித்தொடர்பாளர், அதனால் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே அந்த ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ட்ரோன்களை பறக்கவிட்டது யார், அவை எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |