ஆளில்லாமல் இயங்கும் ஹெலிகொப்டர்களை ஆர்டர் செய்துள்ள பிரான்ஸ்
பிரான்ஸ் ராணுவம் ஆறு ஆளில்லாமல் இயங்கும் ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்துள்ளதாக ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா ஹெலிகொப்டர்களை ஆர்டர் செய்துள்ள பிரான்ஸ்
பிரான்ஸ் ராணுவம், தனது கடற்படைக்காக VSR700 என்னும் ஆளில்லாமல் இயங்கும் ஹெலிகொப்டர்களை ஆர்டர் செய்துள்ளது.

பிரான்ஸ் ஆறு ஆளில்லாமல் இயங்கும் ஹெலிகொப்டர்களை ஆர்டர் செய்துள்ளதாக அந்த ஹெலிகொப்டர்களை தயாரிக்கும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த ஆறு ஹெலிகொப்டர்களும், 2028ஆம் ஆண்டு பிரெஞ்சு கடற்படை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.
நீண்ட நேரம் ஒரு குறிப்பிட்ட இலக்கை கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகொப்டர்கள், பின்னர் கடற்படைக்கு அனுப்பும் தகவலைத் தொடர்ந்து கடற்படையின் ஹெலிகொடர்கள் சம்பந்தப்பட்ட இலக்கைச் சென்றடையும்.
அபாயகரமான இடங்களிலும் பயன்படுத்தப்பட இயலும் இத்தகைய ஹெலிகொப்டர்களை பயன்படுத்தும் முதல் நாடு என்னும் பெருமையை பிரான்ஸ் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |