கூடுதல் புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்த பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்த ஏற்பாடு செய்ய உத்தரவு
பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்று, Mayotte என அழைக்கப்படும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஒன்றிலுள்ள இரண்டு தீவுகளைக் கொண்ட நாடாகும்.
ஏற்கனவே வறுமையிலிருக்கும் Mayotte தீவுகளுக்கு, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வறுமைக்கும் ஊழலுக்கும் தப்பியோடி வருகிறார்கள் புலம்பெயர்வோர், சட்டவிரோதமாக!
அது, ஏற்கனவே வறுமையில் வாடும் Mayotte மக்களுக்கு மேலும் கடினமான சூழலை உருவாக்குகிறது. அதனால், அங்கு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிலவுகின்றன.
ஆகவே, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை Mayotteஇலிருந்து நாடுகடத்த திட்டமிட்டுள்ளது பிரான்ஸ் அரசு.
அதற்காக, கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு Mayotte அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau.
இந்த மாதம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை காங்கோ நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ள Bruno Retailleau, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதே தனது முதன்மையான நோக்கம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |