கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் செய்தி ஒன்றை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
Yahya Sinwar was the main person responsible for the terrorist attacks and barbaric acts of October 7th. Today, I think with emotion of the victims, including 48 of our compatriots, and their loved ones. France demands the release of all hostages still held by Hamas.
— Emmanuel Macron (@EmmanuelMacron) October 17, 2024
சமூக ஊடகமான எக்ஸில் இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், யாஹ்யா சின்வார் என்பவர் அக்டோபர் 7ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கர தாக்குதல்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு பொறுப்பான முக்கிய நபர் ஆவார்.
என் நாட்டவர்களான 48 பேர் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் உட்பட ஹமாஸால் கொல்லப்பட்டவர்களை இன்று நான் உணர்வுபூர்வமாக நினைவுகூருகிறேன்.
மேலும், ஹமாஸ் பிடியில் இன்னமும் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு பிரான்ஸ் கோருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |