பிரித்தானியாவை முந்தியது பிரான்ஸ்: பாரீஸிடம் மதிப்பை இழந்த லண்டன்
ஐரோப்பாவின் அதிக மதிப்புடைய பங்குச்சந்தை என்னும் பெருமையை பிரான்சிடம் இழந்தது பிரித்தானியா.
லண்டனை முந்திய பிரான்ஸ்
ஐரோப்பாவின் அதிக மதிப்புடைய பங்குச்சந்தை என்னும் பெருமையை பிரித்தானிய பங்குச்சந்தை, பிரான்சிடம் இழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மதிப்பை இழந்த பவுண்டு, பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் போன்ற விடயங்கள் பிரித்தானியாவிலும், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு பிரான்சிலும் ஆகிய விடயங்களே பிரித்தானியாவின் பின்னடைவுக்குக் காரணம் என்கிறது Bloomberg ஊடகத்தின் தரவுகள்.
GETTY IMAGES
பாரீஸ் முந்துவது இதுவே முதல் முறை
லண்டனை பங்குச்சந்தைகள் விடயத்தில் பாரீஸ் முந்துவது இதுவே முதல் முறையாகும்.
பிரித்தானிய பங்குகளின் மதிப்பு சுமார் 2.821 ட்ரில்லியன் டொலர்களாகவும் (2.3 ட்ரில்லியன் பவுண்டுகள்), பிரான்சின் பங்குகளின் மதிப்பு சுமார் 2.823 ட்ரில்லியன் டொலர்களாகவும் உள்ளது என்கிறது Bloomberg.
2016இல், லண்டன் பங்குச்சந்தையின் மதிப்பு, பிரான்சின் பங்குச்சந்தையின் மதிப்பை விட 1.4 ட்ரில்லியன் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.