பிரான்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக துவங்க இருக்கும் மிகப்பெரிய விசாரணை: விவரம் செய்திக்குள்...
பிரான்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக மிகப்பெரிய விசாரணை ஒன்று புதன்கிழமை (செப்டம்பர் 8ஆம் திகதி)துவக்கப்பட உள்ளது...
2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பாரீஸில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைதான் அது.
ஐ எஸ் அமைப்பின் மூன்று குழுக்கள் பாரீஸிலுள்ள உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் Bataclan concert hall என்ற இடத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்தியதன் விளைவாக 130 பேர் கொல்லப்பட்டார்கள்.
தாக்குதல் நடத்தியவர்களில் Salah Abdeslam (31) என்னும் ஒருவன் மட்டும் வெடிகுண்டு பொருத்திய தனது கவச உடையை விட்டுவிட்டு ஓடிவிட்டான். பின்னர் அதை பொலிசார் சோதித்ததில், அதில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பின் பிரஸ்ஸல்ஸில் ஓரிடத்தில் பதுங்கிருந்த அவனை பொலிசார் சுற்றி வளைத்துக் கைது செய்தார்கள்.
அவன் இதுவரை மவுனம் காத்துவரும் நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவன் நீதிமன்றம் முன் சாட்சியாக நிறுத்தப்பட இருக்கிறான். அப்போதாவது அவன் பேசுவானா என்பது தெரியவில்லை.
இதுபோக, தாக்குதலுக்கு உதவியதாக 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களும் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட உள்ளார்கள். மற்றொரு ஆறு பேர் மீதும் விசாரணை நடத்தப்பட உள்ளது, அவர்களில் ஐந்துபேர் இறந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அவர்கள் இல்லாமலே அவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு 2022 மே 24 மற்றும் 25 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.