பிரான்சில் பொலிசாருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பிரான்சில் மஞ்சள் மேலங்கி போரட்டக்காரர் ஒருவரை, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால், அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரான்சில் மஞ்சள் மேலங்கி எதிர்ப்பு இயக்கம் என்ற குழு உருவானது. இந்த போராட்ட குழு 2019-ஆம் ஆண்டு எரிவாயு மீதான வரிகள் உயர்த்தப்பட்டதற்கு போராட்டம் நடத்தியது.
அந்த ஆண்டு மஞ்சல் மேலங்கி போராட்டம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. அப்படி தலைநகர் பாரிசில் நடந்த இந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியதால், பொலிசார் கலவரத்தை அடக்க முயற்சித்தனர்.
இதன் காரணமாக பொலிசார் ஒருவர், ரப்பர் குண்டுகள் கொண்ட LBD துப்பாக்கியை வைத்து, மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர் ஒருவரை சுட்டார்.
இதனால் காயமடைந்த அவர், இது குறித்து அந்த பொலிஸ் அதிகாரி மீது புகார் அளித்தார். அப்போது அவர் இந்த செயலில் ஈடுபட்ட பொலிசாருக்கு சிறை தண்டனையும், 6 மாத கால நீக்கமும் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, இது தொடர்பான வழக்கு விசாரணை பரிஸ் நிர்வாக நீதிமன்றத்தில் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று(16.12.2021) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், பொலிஸ் அதிகாரிக்கு 1500 யூரோ அபாரதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.