பிரான்சில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஓரினச்சேர்க்கையாளர்கள் நடத்தும் மிகப் பெரிய பேரணி! எதற்காக தெரியுமா?
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இணைந்து மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஞாயிற்றுக் கிழமை 25-ஆம் திகதி, குறித்த பேரணி நடைபெறவுள்ளது.
இந்த பேரணி, உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணி அளவில் Place du Châtelet-ல் ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு Place de la République-ல் நிறைவடைகிறது. பல்வேறு ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் குரலை மிக அழுத்தமாக பதிவு செய்யவே இந்த பேரணி அவசியமாகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரணியில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக PCR பரிசோதனை அறிக்கையை கைகளில் வைத்திருக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி முகக்கவசம், சனிடைசர் பாட்டில்கள் போன்றவைகளை கைகளில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.