கருணைக்கொலைச் சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
பிரான்சில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்த கருணைக்கொலைச் சட்டம், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
கருணைக்கொலை மசோதாவுக்கு ஆதரவாக 291 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 241 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஒரு சட்டம் அரசியலமைப்பிற்கு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்கும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பான அரசியலமைப்பு சபையிடம், மசோதாவின் சில விதிகளை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம், தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தான நோய் முற்றிய அல்லது இறுதிக்கட்டத்தில் உள்ள வயதான பிரான்ஸ் குடிமக்கள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வழிவகுக்கும்.

அந்த நோய், அவர்களால் தாங்க முடியாத நோயாகவும், சிகிச்சைக்குக் கட்டுப்படாததாகவும், தொடர்ச்சியான உடல் அல்லது மன வேதனையில் ஆழ்த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
விடயம் என்னவென்றால், இதேபோல ஏற்கனவே மூன்று முறை இந்த மசோதா கீழவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டும், மேலவையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
என்றாலும், பெரும்பான்மை பிரான்ஸ் மக்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆக, இம்முறை மேலவை என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |