15 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு சமூக ஊடகத் தடை: பிரான்சில் மசோதா நிறைவேற்றம்
15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேற்றம்
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை, 15 வயதுக்கு குறைவான பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
சட்டமாகும் முன், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும்.
அந்த மசோதா நிறைவேற்றம் தொடர்பில் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பிரான்ஸ் நாட்டு சிறார்கள் மற்றும் பதின்மவயதினரை பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய படியாகும் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |