பிரான்சில் சுகாதார பாஸ் நீட்டிப்பு! கசிந்த முக்கிய தகவல்
பிரான்சில் சுகாதாரா பாஸ் நடை முறை அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது வீழ்ச்சியடைந்து வந்தாலும், இது வரும் காலங்களில் அதிகரிக்கலாம். குறிப்பாக, நாட்டில் குளிர்காலத்தின் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று நம்பப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் தான் சுகாதார பாஸ் நடைமுறை வரும் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டிப்பது குறித்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிகப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், சுகாதார நிலைமை திடீரென மோசமடைந்தால், நாட்டில் சுகாதார அவசரகால நிலைமை பிரகணப்படுத்தப்படலாம்.
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அப்போது சுகாதார பாஸ் (pass sanitaire) மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். இதனால், சுகாதார பாஸ் நடைமுறைக்கு கொண்டுவரும் அறிவிப்பு ஆணைகள் விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால், ஜூலை 31 ஆம் திகதி 2022-ஆம் ஆண்டுவரை சுகாதார பாஸ் நடைமுறையில் இருப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.