சொகுசுக் கப்பலில் பயணித்த பிரான்ஸ் நாட்டவருக்கு ஹன்டா வைரஸ்
தொற்று அறிகுறிகள் சொகுசுக் கப்பலில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்களில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று
அர்ஜெண்டினாவிலிருந்து Cape Verde என்னுமிடத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்த MV Hondius என்னும் சொகுசுக் கப்பலில் பயணித்த சுற்றுலாப்பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியாகிவிட்டதால் இந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், அந்தக் கப்பலில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் ஐந்து பேர் பிரான்சுக்கு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

அது குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் பிரதமரான செபாஸ்டியன் லெக்கார்னு, அந்த ஐந்து பேரில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Cinq de nos compatriotes présents sur le MV Hondius, foyer d’infection à Hantavirus, ont été rapatriés sur le territoire national. L’un d’entre eux a présenté des symptômes dans l’avion de rapatriement.
— Sébastien Lecornu (@SebLecornu) May 10, 2026
Aussi, ces cinq passagers ont tout de suite été placés en isolement strict…
விமானத்தில் வரும்போதே அவருக்கு அறிகுறிகள் தெரியத் துவங்கியதாகவும், ஆகவே, அவர்கள் ஐந்து பேருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |