பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க 'சிறார் வன்கொடுமை சட்டம்' நிறைவேற்றம்!
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சிறார்களுடன் உடலுறவை தடைசெய்யும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது.
பிரான்சில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் உள்ள சட்டமியற்றுபவர்கள் 15 வயதிற்குட்பட்ட சிறார்களுடனான பாலியல் உறவை கற்பழிப்பு என வரையறுக்க சட்டத்தை இயற்றியுள்ளனர்.
வியாழக்கிழமை அமுல்படுத்தப்பட்ட இந்த புதிய சட்டத்தின் கீழ், சிறார் பாலியல் குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக 15 வயது ஆகிவிட்டால் அவர்களின் விருப்பப்படி உறவு வைத்துக்கொள்ள சட்டத்தில் அனுமதி இருந்தது.
இதனால், பாலியல் பலாத்கார குற்றத்தை நிரூபிக்க சிறுவர்கள் பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார், அச்சுறுத்தப்பட்டார் அல்லது ஏமாற்றப்பட்டார் என்பதை அரசு வக்கீல்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி, பெரியவர்கள் 18 வயதுக்கு குட்பட்ட குழந்தைகளுடன் அவர்களின் விருப்பத்துடன் உறவு கொண்டால் கூட அது சட்டப்படி பாலியல் குற்றம் என்றே கருதப்படும்.
"இது எங்கள் குழந்தைகளுக்கும் நமது சமூகத்திற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம்" என்று நீதி அமைச்சர் எரிக் டுபோண்ட்-மோரெட்டி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.