உச்சம் தொட்ட பிரான்ஸ் கொரோனா பலி எண்ணிக்கை: இதுவரை எத்தனை பேர் பலி தெரியுமா?
பிரான்ஸ் கொரோனா பலி எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியது. புதன்கிழமை நிலவரப்படி 99,805 ஆக இருந்த பலி எண்ணிக்கை, நேற்று 100,000ஐத் தாண்டியது.
ஐரோப்பாவிலேயே, கொரோனா பலி எண்ணிக்கை 100,000ஐத் தாண்டிய மூன்றாவது நாடாகும் பிரான்ஸ். ஏற்கனவே, பிரித்தானியாவும் இத்தாலியும் இந்த கட்டத்தைத் தாண்டிவிட்டன.
உலக அளவில் அதிகம் பேரை கொரோனாவுக்கு பலிகொடுத்த நாடு அமெரிக்கா, அதைத் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது பிரேசில்.
பிரான்சில் கொரோனாவின் முதல் அலை உருவானபோது, சுமார் 30,000 பேர் பலியான நிலையில், மூன்றாவது அலையின்போது உயிரிழந்தவர்களையும் சேர்த்து, தற்போது பலி எண்ணிக்கை 100,073 ஆக உயர்ந்துள்ளது.
Depuis le début de la pandémie, cent mille Françaises et Français ont succombé au virus. Nous avons tous une pensée pour leurs familles, leurs proches, pour les enfants qui ont perdu un parent ou un grand-parent, les fratries endeuillées, les amitiés fauchées.
— Emmanuel Macron (@EmmanuelMacron) April 15, 2021