6வது நாளாய் தொடரும் போராட்டம்: வீதியில் இறங்கிப் போராடும் மக்கள்
பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதாக அரசு வெளியிட்ட மசோதாவிற்கு எதிராகத் தொழிலாளர்கள் பலரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 6வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
6வது நாளாய் தொடரும் போராட்டம்
தொழிற்சங்கங்கள் பிரெஞ்சு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கருதும் ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்தும் மசோதாவின் மீது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மார்ச் 7, செவ்வாய் அன்று பிரான்ஸ் முழுவதும் வேலைக்குச் செல்லாமல் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இதில் துப்புரவுப் பணியாளர்கள்,ரயில் ஓட்டுநர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
@MICHEL EULER / AP
ஏறக்குறைய இரண்டு மாத கால போராட்டங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ஷோகேஸ் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் பாரிஸ் மற்றும் நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த மசோதா பிரான்ஸ் செனட்டில் இந்த வாரம் விவாதத்தில் உள்ளது.தொழிற்சங்கங்கள் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை முடக்கிவிடுவதாக அச்சுறுத்துகிறது, நாடு முழுதும் பல துறைகளில் வேலை நிறுத்தங்கள், SNCF தேசிய இரயில் ஆணையத்தில் வேலை நிறுத்தம் எனத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கின்றன.
ஓய்வூதிய மசோதா
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இம்மசோதாவானது உத்தியோக பூர்வ ஓய்வூதிய வயதை 62ல் இருந்து 64 ஆக உயர்த்தி, பிரான்சின் மக்கள்தொகையின் வயது மற்றும் ஆயுட்காலம் நீடிப்பதால், முழு ஓய்வூதியம் பெற 43 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.
பெரும்பாலான பிரெஞ்சு வாக்காளர்கள் மசோதாவை எதிர்ப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இடதுசாரி சட்டமியற்றுபவர்கள், ஓய்வூதிய முறைக்கு நிதியளிப்பதற்காக நிறுவனங்களும் செல்வந்தர்களும் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
@Reuters
வேலைநிறுத்தம் எல்லா இடங்களிலும் தொடங்கிவிட்டது.தொழிற்சங்கங்கள் பொதுப் போக்குவரத்தில் வேலைநிறுத்தங்களை மேற்கொள்ளும் என்று எச்சரித்துள்ளன.
இது நாட்டின் சில பகுதிகளை வாரக்கணக்கில் முடக்கிவிடக்கூடும்.அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களின் மிகப்பெரிய நாளான ஜனவரி 31 அன்று 1.27 மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7ஆம் தேதியான இன்று ஏற்கனவே போராட்டங்கள் துவங்கி, ரென்னெஸ் நகரில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியிலிருந்து சுமார் 100 எதிர்ப்பாளர்களால் தடுக்கப்பட்டதாக அந்நாட்டுத் தகவல் துறை அறிவித்துள்ளது.