பிரான்சில் மீண்டும் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் பெட்ரொல் விலை மீண்டும் அதிகரித்துள்ளதை, எரிசக்தி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அங்கு பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், பிரான்சிலும் கடந்த வாரம் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டது.
இதனால், இதற்கு கண்டிப்பு தெரிவித்து, மஞ்சள் மேலங்கியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது பிரான்சில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை, கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளது.
கடந்தவாரத்தில் 1.5354 யூரோக்களுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் தற்போது 1.5883 யூரோக்களுக்கு விற்பனையாகி வருகிறது. ஸ்பெஷல் பெட்ரோல் SP 95, ஒரு லிட்டரின் விலை தற்போது 1.6567 யூரோக்களுக்கு விற்பனையாகி வருகிறது.
இதை சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோலில் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.6664 யூரோவுக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.