பிரான்ஸ் விமானிகள் திடீர் வேலைநிறுத்தம்
பிரான்ஸ் விமானிகள் இன்று முதல் திங்கட்கிழமை வரையில் வேலைநிறுத்தத்துக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பிரான்ஸ் விமானிகள் திடீர் வேலைநிறுத்தம்
பிரான்ஸ் விமானிகள் யூனியன், இன்று, அதாவது, மே மாதம் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஊதியம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், மே 18க்குப் பிறகு மீண்டும் வேலைநிறுத்தம் தொடர்பில் நோட்டீஸ் விடுக்கப்படும் என யூனியன் தெரிவித்துள்ளது.
புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானங்கள் இயங்கினாலும், வார இறுதி நாட்களில் விமான சேவை இருக்கும் என்பதை உறுதி செய்ய இயலாது என கூறியுள்ள French Bee விமான நிறுவனம், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |