பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற விரும்புவோருக்கு சிக்கலை ஏற்படுத்தவிருக்கும் ஒரு திட்டம்...
பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற விரும்புவோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், குடியிருப்பு அனுமதி அட்டை பெற விரும்புவோருக்கு மொழித்தேர்வைக் கட்டாயமாக்கும் திட்டம் ஒன்று உள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குடியிருப்பு அனுமதி அட்டை பெற எந்த மட்டத்தில் மொழித்திறன் தேவைப்படும் என்பது குறித்து அவர் விவரமாக குறிப்பிடவில்லை.
ஒரே ஆறுதல் என்னவென்றால், இந்த திட்டம் இப்போதைக்கு பிரேரணையாக முன்வைக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். அது இனி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்குப் பிறகுதான் சட்டமாக்கப்படும். ஆனால், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இந்த திட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மொழித்தேர்வைக் கட்டாயமாக்கும் திட்டம், நீண்ட கால அல்லது, பல ஆண்டுகள் பிரான்சில் வாழ விரும்பும் குடியிருப்பு அனுமதி அட்டை பெற விரும்புபவர்களுக்கு மட்டுமே என Darmanin தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.