பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம்
France plans to military Assistance for Police to control protests: நாடு முழுவதும் வெடிக்கும் வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பிரான்சில் தொடரும் வன்முறை போராட்டங்கள்
விலைவாசி உயர்வு மற்றும் தினசரி வாழ்க்கை செலவினங்கள் குறித்து பிரான்ஸில் உருவான பொதுமக்கள் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த பாரிஸ் நகரின் முக்கிய சில இடங்கள் மற்றும் வடக்கு பிரான்சின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராடி வரும் நிலையில், எதிர்வரும் வார இறுதியில் பல்வேறு அமைப்புகள் புதிய போராட்டங்களை அறிவித்து அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் வார இறுதி நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆனது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது

களமிறக்கப்படும் ராணுவத்தினர்
எதிர்வரும் வார இறுதியில் பல்வேறு போராட்டங்கள் பிரான்சின் பல முக்கிய பகுதிகளில் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சனிக்கிழமை முதல் காவல் துறையினருக்கு பக்க பலமாக ராணுவ படைகளும் களமிறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அதன்படி, முக்கியமான அரசு கட்டிடங்கள், அதிக உணர்திறன் கொண்ட பகுதிகளில் சென்டினெல்லே(Operation Sentinelle) என்ற சிறப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார் என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காவல்துறையினரும், ஜெண்டார்ம்ஸ் என்ற சிறப்புப் படையினரும் மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்துவது மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது எந்தவொரு இரக்கமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார்.
இறுதியில் போராட்டங்களை கட்டுப்படுத்த அதிக அளவிலான காவல் படையினர் குவிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.