பதவியிழக்கும் அபாயத்தில் பிரான்ஸ் பிரதமர்: ஒரு சர்ச்சைப் பின்னணி
எட்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பிரான்ஸ் பிரதமருக்கு மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
சர்ச்சைப் பின்னணி
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
அவர் முன்வைத்துள்ள திட்டங்களில் ஒன்று மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார் பேய்ரூ.
ஆனால், 2003ஆம் ஆண்டு இதேபோல பிரான்ஸ் பிரதமராக இருந்த Jean-Pierre Raffarin விடுமுறை ஒன்றை ரத்து செய்ய, அதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
ஆக, இப்போது இரண்டு விடுமுறைகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ள பேய்ரூவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீரமானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேய்ரூ தோல்வியை சந்திப்பாரானால், எட்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்ற அவர் இம்முறை பதவியிழக்க வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |